தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘2024ல் விமானப் போக்குவரத்து அதிகரிக்கும்’

1 mins read
3e5c4a54-49a9-41a5-9777-47ad5984ab0e
விமானப் போக்குவரத்து இந்த மாதம், கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பிருந்ததில் 92%ஐ எட்டும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் எதிர்பார்க்கிறது. - படம்: சாவ் பாவ்

ஆசிய பசிபிக் வட்டாரம் கொவிட்-19 கிருமிப் பரவலிலிருந்து முழுமையாக மீண்டுவரும் வேளையில், 2024ஆம் ஆண்டு, உலகளாவிய விமானப் போக்குவரத்து கிருமிப் பரவலுக்கு முந்தையை நிலையை விஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்துத் துறை கவனிப்பாளர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.

தேவை தொடர்ந்து நீடிப்பதால், 2024ஆம் ஆண்டில் விமான நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும் என்று கருதப்படுகிறது. 2022, 2023ஆம் ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறை, கிருமிப் பரவலின்போது ஏற்பட்ட இழப்புகளிலிருந்து மீண்டு கிட்டத்தட்ட 2019ஆம் ஆண்டின் நிலையை எட்டியது. இருப்பினும் புதிய விமானங்களின் விநியோகத்தில் நிலவும் சிக்கல்களும் குறைவான லாபமும் வளர்ச்சிக்குத் தடைக்கற்களாக விளங்குகின்றன.

இந்நிலையில், அடுத்த ஆண்டு விமானப் போக்குவரத்து முழுமையாக மீட்சிகாணும் என்று வல்லுநர்கள் கருத்துரைத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்