நியூயார்க் பூங்காவில் தவறி விழுந்து மாண்ட மாது

நியூயார்க் பூங்காவில் தவறி விழுந்து மாண்ட மாது

1 mins read
d7d2b463-a984-422a-9425-9c1e3d38dc37
நியூயார்க்கில் மின்னவாஸ்கா மாநில பூங்காவில், டிசம்பர் 22 ஆம் தேதி அன்று 39 வயதான சிங்கப்பூர் பெண்ணான திருவாட்டி நூர் ஆயிஷா 30 மீட்டர் பாறையிலிருந்து விழுந்து மாண்டார். - படம்: அப்துல் ரவுஃப் சைட் ஃபேஸ்புக்

நியூயார்க்கில் மின்னவாஸ்கா மாநில பூங்காவில், டிசம்பர் 22 ஆம் தேதி அன்று 39 வயதான சிங்கப்பூர் பெண்ணான திருவாட்டி நூர் ஆயிஷா 30 மீட்டர் உயர செங்குத்துப் பாறையிலிருந்து விழுந்து இறந்தார்.

இதைப் பற்றி தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட அந்தப் பெண்ணின் கணவர், திரு அப்துல் ரவுஃப், இருவரும் பூங்காவில் இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இந்நிகழ்வு ஏற்பட்டது என்று பகிர்ந்துகொண்டார்.

மேலும், தன் மனைவியைக் காப்பாற்ற முன்வந்த அவர், சற்று நழுவியதாகவும், இருப்பினும் விழவில்லை என்றும் தெரிவித்தார். உதவிக்குக் கத்தியபோது மூன்று சகோதரிகள் உட்பட சில பூங்கா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகவும் அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார்.

அவரை காப்பாற்றியபோது, அவர் சுவாசித்துக் கொண்டிருந்ததாகவும் ஹெலிகாப்டரிலிருந்து மருத்துவ வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டபோது அவரது சுவாசம் நின்றுவிட்டது என்றும் திரு அப்துல் ரவுஃப் பகிர்ந்துகொண்டார்.

இருவரும் ‘நோபல் ஸ்கை இன்டர்நேஷனல்’ என்ற சொத்துச் சந்தை முதலீட்டு நிறுவனத்தின் இணை  நிறுவனர்களான அவர்கள், வேலை நிமித்தமாக அமெரிக்காவிற்கு அடிக்கடி பயணம் செய்தார்கள். தமது மனைவியின் பிரேதப் பரிசோதனை முடிந்துவிட்டது என்றும் அவரது உடல் டிசம்பர் 27ல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இங்கு வந்து சேரும் என்றும் திரு அப்துல் ரவுஃப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்