700 பொருள்களின் ஜிஎஸ்டி வரி உயர்வை ஜயண்ட் பேரங்காடி ஏற்கும்

700 பொருள்களின் ஜிஎஸ்டி வரி உயர்வை ஜயண்ட் பேரங்காடி ஏற்கும்

1 mins read
a101b43b-c3f2-4062-8fbe-aeeef8c0802f
பாய லேபார் ஸ்குவேர் ஜயண்ட் பேரங்காடியில் வாடிக்கையாளர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

எதிர்வரும் 2024ஆம் ஆண்டில் பொருள் சேவை வரி ஒரு விழுக்காடு உயர உள்ளது.

இந்நிலையில், வேறு சில பேரங்காடிகள் ஜிஎஸ்டி வரி உயர்வை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்திருப்போல் ஜயண்ட் பேரங்காடியும் இந்த வரி உயர்வை ஏற்க முன்வந்துள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 700 அத்தியாவசியப் பொருள்களுக்கான ஒரு விழுக்காடு வரி உயர்வை தான் ஏற்பதாக ஜயண்ட் பேரங்காடி அறிவித்துள்ளது.

இதில் அன்றாடம் வரும் உணவுப் பொருள்கள், தனிநபர் உபயோகப் பொருள்கள், அத்தியாவசிய வீட்டுப் பொருள்கள் அடக்கம் என்று அது தெரிவித்துள்ளது.

இதை செவ்வாய்க்கிழமையன்று அறிவித்த ஜயண்ட் பேரங்காடி பணவீக்கம், வாழ்க்கைச் செலவின உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகளிலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தது.

வரி உயர்வை ஏற்க முன்வந்துள்ள ஜயண்ட் பேரங்காடி, மேற்குறிப்பிட்ட 700 பொருள்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்து சேகரிப்பை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டதாக விளக்கியது.

அத்துடன், முதியோருக்கு பணவீக்கத்தின் தாக்கத்தைக் குறைக்க ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பேரங்காடியில் உள்ள அனைத்துப் பொருள்களுக்கும் 4% கட்டணக் கழிவு வழங்கப்படும் என்று அந்தப் பேரங்காடி தெரிவித்துள்ளது. இந்தக் கட்டணக் கழிவு 2024 ஆண்டு முழுவதும் இருக்கும் என்றும் அது தெளிவுபடுத்தியது.

குறிப்புச் சொற்கள்