வரவுசெலவுத் திட்ட அறிக்கையை துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் வாசிப்பது வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒலி, ஒளிபரப்படும். இணையம் மூலமாகவும் www.singaporebudget.gov.sg என்னும் தளத்தில் அவரது உரையைக் காணமுடியும்.
வரவுசெலவுத் திட்ட அறிக்கையை திரு வோங் முழுமையாக வாசித்து முடித்த பின்னர் அந்த அறிக்கை இதே இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சு வியாழக்கிழமை (டிசம்பர் 28) கூறியது.
வரவுசெலவுத் திட்டம் 2024 தொடர்பான தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பொதுமக்கள் www.reach.gov.sg/budget2024 என்னும் இணையத்தளம் வாயிலாக பகிர்ந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
ஜனவரி மாதம் 26ஆம் தேதி வரை அவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
நேரடியாகக் கருத்துகளைத் தெரிவிக்கவும் கருத்தறியும் அரசாங்கப் பிரிவான ‘ரீச்’ ஏற்பாடு செய்துள்ளது. ஒன் நார்த் வட்டாரத்தில் உள்ள கிளாக்சிஸ் அரங்கில் ஜனவரி 23ஆம் தேதி பிற்பகல் 12 மணியிலிருந்து 3 மணிவரை அந்த நேரடி கருத்துத் திரட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நிதி அமைச்சும் மக்கள் கழகத்தின் அடித்தள அமைப்புகளும் இணைந்து, மக்கள் குடியிருப்புகளில் நேரடியாகவும் மெய்நிகர் முறையிலும் (Ask Kopi Kakis #shareyourviews ) கருத்துப் பகிர்வு நிகழ்வுகளை ஜனவரி 26 வரை ஏற்பாடு செய்துள்ளது.

