தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜனவரி முதல் கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி ஓட்டுநர்கள் அதிக தரகுக் கட்டணம் செலுத்த வேண்டும்

1 mins read
0c151c78-4514-40f1-8fb6-f1f89425a606
கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் டாக்சி ஓட்டுநர்களிடமிருந்து ஜனவரி 1ஆம் தேதி 2024 முதல், செயலி,தொலைபேசிகளில் செய்த பதிவுகள் மூலம் சம்பாதிக்கப்படும் தொகையிலிருந்து 7 விழுக்காடு தரகுக் கட்டணம் செலுத்த வேண்டும்.  - படம்: தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் 

கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் ஓட்டுநர்களிடமிருந்து 2024 ஜனவரி 1ஆம் தேதி முதல், செயலி , தொலைபேசிகளில் செய்த பதிவுகள் மூலம் சம்பாதிக்கப்படும் தொகையிலிருந்து 7 விழுக்காடு தரகுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அந்நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.

அதிக செயல்பாட்டுச் செலவு, குறிப்பாக தொழில்நுட்ப மேம்பாடு, மின்னிலக்க முறையில் கட்டணம் செலுத்துவது போன்றவற்றின் காரணத்தால் இவ்வாறு டாக்சி ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இம்மாற்றத்தினால் தொடர்ந்து வரும் சவால்களை டாக்சி ஓட்டுநர்கள் எதிர்கொள்ள 2024 ஜனவரி 1 முதல் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை, $9க்கும் குறைந்த சவாரிகளுக்கு அவர்கள் தரகுக் கட்டணங்கள் செலுத்த தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்