சீனாவின் ஆடம்பர கார்கள் சிங்கப்பூரில் அறிமுகம்

சீனாவின் ஆடம்பர கார்கள் சிங்கப்பூரில் அறிமுகம்

1 mins read
71c12dd2-2483-49ce-a112-40da5c9493a0
ஸீக்கர் நிறுவனத்தின் ‘எஸ்யுவி’ வகை வாகனமான ‘எக்ஸ்’. - படம்: பிக் ஃபிஷ் பப்ளிஷிங்

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்களின் உயர்வு வாகன விற்பனையாளர்களின் ஆர்வத்தைத் தணித்ததாகத் தெரியவில்லை.

ஆடம்பர கார்களை சிங்கப்பூருக்குக் கொண்டு வருவதில் அவர்கள் முனைப்புடன் செயல்படுகின்றனர்.

ஆவ்டி கார் சில்லறை விற்பனையாளரான பிரிமியம் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம், ஸீக்கர் என்னும் சீனாவின் ஆடம்பர மின் வாகன நிறுவனத்துக்கான சிங்கப்பூர் விற்பனையாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம் டிசம்பர் இறுதி வாரத்தில் கையெழுத்தாகி உள்ளது.

2024ஆம் ஆண்டின் முற்பாதியில் அந்தப் புதிய காருக்கான விற்பனைக் கூடத்தை லெங் கீ ரோட்டில் அமைக்க இருப்பதாக பிரிமியம் ஆட்டோமொபைல்ஸ் வியாழக்கிழமை (டிசம்பர் 28) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸுக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

அந்த காருக்கான சேவை நிலையம் உபி தொழிற்பேட்டை வட்டாரத்தில் அமையும் என்றும் அது தெரிவித்தது.

இரண்டு வகை கார்களை ஸீக்கர் இங்கு அறிமுகம் செய்யும்.

‘009’ என்னும் பலநோக்கு வாகனமும் ‘எக்ஸ்’ என்னும் ‘எஸ்யுவி’ வாகனமும் 2024ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இங்கு விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்