‘அவர் தெம்பனிஸ் ஹப்’ செல்பவர்கள் எஸ்பிஎச் வெளியீடுகளை இலவசமாகப் படிக்கலாம்

‘அவர் தெம்பனிஸ் ஹப்’ செல்பவர்கள் எஸ்பிஎச் வெளியீடுகளை இலவசமாகப் படிக்கலாம்

1 mins read
f3572d23-264d-4462-ae60-178e6e92dc22
மூன்று நாள் நிகழ்ச்சியில் உள்ளூர்க் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, வாண வேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. - படம்: அவர் தெம்பனிஸ் ஹப்

அடுத்த மூன்று மாதங்கள் ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ சமூக வளாகம் செல்பவர்கள் எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் 7 வெளியீடுகளை இலவசமாகப் படிக்கலாம்.

தமிழ்முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், த பிசினஸ் டைம்ஸ், லியன்ஹ சாவ்பாவ், ஷின் மின் டெய்லி நியூஸ், பெரிட்டா ஹரியான், யூ வீக்லீ சஞ்சிகை ஆகியவற்றை சந்தா செலுத்தாமலே படிக்கலாம்.

இந்த கூட்டுத்திட்டம் டிசம்பர் 30ஆம் தேதி தொடங்கி மார்ச் 31ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும். மின்னிலக்க கல்வியறிவை வளர்க்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த புது நடவடிக்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘அவர் தெம்பனிஸ் ஹப்’ சமூக வளாகத்தில் உள்ள குறியீடுகளை வருடி செய்திகளை இலவசமாக படிக்கலாம். வளாகத்தின் 120 மீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் இருப்பவர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும்.

இலவசமாக செய்திகளைப் படிப்பவர்கள் எஸ்பிஎச் கணக்குகள் வைத்திருக்க வேண்டும். எஸ்பிஎச் கணக்குகளை இலவசமாக தொடங்கமுடியும்.

இந்த திட்டம் மூன்றுநாள் நிகழ்ச்சியாக சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ சமூக வளாகத்தில் நடக்கிறது.

மூன்று நாள் நிகழ்ச்சியில் உள்ளூர்க் கலைஞர்களின் இசை நிகழ்ச்சி, வாண வேடிக்கை போன்ற நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

குறிப்புச் சொற்கள்