தனியார் வீடுகளின் விலை 6.7% ஏற்றம்

தனியார் வீடுகளின் விலை 6.7% ஏற்றம்

1 mins read
f00c127f-1ad7-47a2-9dd1-00b6019a95ae
தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை கடந்த ஆண்டு 2.7 விழுக்காடு உயர்ந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தனியார் வீடுகளின் விலை கடந்த ஆண்டு 6.7 விழுக்காடு ஏற்றம் கண்டது.

இருப்பினும், 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் விலை ஏற்றம் மெதுடைந்துள்ளது.

2022ஆம் ஆண்டில் வீடுகளின் விலை 8.6 விழுக்காடு அதிகரித்தது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட தனியார் வீடுகளின் எண்ணிக்கை குறைந்தது.

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு விற்கப்பட்ட தனியார் வீடுகளின் எண்ணிக்கை 15 விழுக்காடு குறைவு.

2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தனியார் வீடுகள் விற்பனையைப் பொறுத்தவரை இதுவே ஆகக் குறைவான விகிதம்.

வீட்டு விலையைத் தணிக்க பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது, பொருளியல் நிலை, வீட்டுக் கடன் விகிதம் அதிகரிப்பு ஆகியவை இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் தனியார் அடுக்குமாடி வீடுகளின் விலை 2.7 விழுக்காடு ஏற்றம் கண்டது.

மூன்றாம் காலாண்டில் அது 0.8 விழுக்காடு அதிகரித்ததாக நகர மறுசீரமைப்பு ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
வீடுகள்