தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பான் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் திருப்பிவிடப்பட்டது

1 mins read
a4010870-e8bf-435f-9e7a-3c73ddba98b2
விமான மோதலைத் தொடர்ந்து ஹனேதா விமான நிலையம் மூன்று மணி நேரத்திற்குமேல் மூடப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வேறு விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.

எஸ்கியூ634 என்னும் அந்த விமானம் பிற்பகல் 2.05 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டது. பயணத்திட்டத்தின்படி அவ்விமானம் அன்றிரவு உள்ளூர் நேரம் 9.40 மணிக்கு ஹனேதா விமான நிலையத்தில் இறங்கவேண்டும்.

இருப்பினும் விமான மோதல் பற்றி தகவல் கிடைத்ததும் இரவு 9.20 மணியளவில் அந்த விமானம் நாரிட்டா விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது. இதனை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

விமான மோதல் நிகழ்ந்த பின்னர் ஹனேதா விமான நிலையம் மூன்று மணி நேரத்துக்கு மேல் மூடப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
விபத்து