கடல்நாக ஆண்டு; புதிய அஞ்சல்தலைகள் வெளியீடு

1 mins read
774b3528-0322-4835-8937-03949363ab04
கடல்நாகப் படங்களைக் கொண்ட புதிய அஞ்சல்தலைகள். - படம்: சிங்போஸ்ட்

சீனப் பஞ்சாங்கப்படி இவ்வாண்டு கடல்நாக ஆண்டு. கடல்நாக ஆண்டின் தொடக்கத்தை முன்னிட்டு சிங்போஸ்ட் புதிய அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது.

அவை கடல்நாகப் படங்களைக் கொண்டுள்ளன.

சீனர்களின் ராசி முறைபடி வெளியிடப்படும் அஞ்சல்தலைகள் வரிசையில் இது ஐந்தாவது முறை என்று சிங்போஸ்ட் கூறியது.

இது 12 ஆண்டுகளுக்கு நடத்தப்படும் என்று அது கூறியது.

இத்திட்டம் 2020ஆம் ஆண்டில் தொடங்கியது.

அந்த ஆண்டில் எலிகளைக் கொண்ட படங்களுடன் அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டன.

புதிய கடல்நாக அஞ்சல்தலைகள் ஜனவரி 5ஆம் தேதியிலிருந்து விற்கப்படும்.

அவற்றை ஓவியரான திருவாட்டி லிம் ஆன் லிங் வடிவமைத்துள்ளார்.

52 காசு, $2 என இரண்டு விலைகளில் இந்த அஞ்சல்தலைகள் வெளியிடப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்