பெரிய, சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணங்கள் குறைந்தன

பெரிய, சிறிய கார்களுக்கான சிஓஇ கட்டணங்கள் குறைந்தன

1 mins read
b1bd22f4-92d9-441c-8b0c-4dfd218ea70d
மோட்டார் சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணத்தைத் தவிர்த்து மற்ற பிரிவுகளுக்கான கட்டணங்கள் குறைந்துள்ளன. - படம்: தமிழ் முரசு

பெரிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக $100,000க்கும் குறைவாக இறக்கம் கண்டுள்ளது.

இப்பிரிவுக்கான கட்டணம் $110,001லிருந்து $85,010ஆகக் குறைந்துள்ளது.

சிறிய கார்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் இதைவிட அதிகம் குறைந்துள்ளது.

இரண்டு வாரத்துக்கு முன்பு அது $85,000ஆக இருந்தது.

தற்போது அது $65,010ஆகக் குறைந்துள்ளது.

பொதுப் பிரிவுக்கான கட்டணம் 10.1 விழுக்காடு குறைந்து $106,388ஆகப் பதிவாகியுள்ளது.

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் 2.6 விழுக்காடு குறைந்துள்ளது. அதன் கட்டணம் $67,599.

மோட்டார் சைக்கிள்களுக்கான வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் மட்டும் உயர்ந்துள்ளது.

$9,002ஆக இருந்த கட்டணம், $9,114ஆக அதிகரித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்