தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் செயல்களில் ஈடுபடுத்திய ஆடவர் இருவருக்கு சிறைத்தண்டனை

1 mins read
9f8f8cef-c1bc-4093-8779-2ab3ec9115ec
ஈத்தன் யான் வெய்லுன் (இடம்), லிம் கார் ஹெங் ஆகிய இருவரும் தங்கள் பாலியல் கொடுமைக்கு ஆளான இளையர்களை 2021ஆம் ஆண்டின் கடைசியில் கிரிண்டர் எனும் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யும் செயலி வழி சந்தித்தனர் - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிரிண்டர் எனப்படும் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்யும் செயலி வழி சந்தித்த இரு 15 வயது இளையர்களுடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொண்ட ஆடவர் இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈத்தன் யான் வெய்லுன் என்ற 46 வயது ஆடவர் சிறுவனுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதற்காக அவருக்கு வியாழக்கிழமை (ஜனவரி 4ஆம் தேதி) 14 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கும்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில் லிம் கார் ஹெங் என்ற 45 வயது ஆடவர், சிறுவனுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதற்காக அவருக்கு புதன்கிழமை (ஜனவரி 3ஆம் தேதி) 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

லிம்முக்கு தண்டனை விதிப்பின்போது 529 ஆபாசப் படங்கள் வைத்திருந்த குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.

மேற்குறிப்பிட்ட இரு ஆடவர்களும் பாலியல் உறவு கொண்ட சிறுவர்களை 2021ஆம் ஆண்டின் கடைசியில் கிரிண்டர் செயலி மூலம் சந்தித்தனர்.

குறிப்புச் சொற்கள்