தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உதவ புதிய நிதி

1 mins read
324a97a2-15a8-4678-a22b-6cf014cb52fb
4PM என்ற லாப நோக்கற்ற அமைப்பானது, தனது உதவித் திட்டங்களை விரிவுபடுத்த, பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளைப் பெறும் வகையில் குடும்ப, இளையர் மேம்பாட்டு நிதியைத் தொடங்கியுள்ளது. - கோப்புப் படம்: பெரித்தா ஹரியான்

பள்ளி செல்லும் குழந்தைகள், இளையர்களைக்கொண்ட மேலும் வசதி குறைந்த குடும்பங்கள் ஜனவரி 3ஆம் அன்று தொடங்கப்பட்ட புதிய நிதி மூலம் ஆதரவைப் பெற முடியும்.

லாப நோக்கமில்லா அமைப்பான ‘4பிஎம்’ வழிகாட்டி, நிதி நிர்வாக வகுப்புகளை உள்ளடக்கிய அதன் திட்டங்களை விரிவுபடுத்தவும், அதிகமானோருக்கு ஆதரவு அளிக்கவும் பொதுமக்களிடமிருந்து நன்கொடைகளைப் பெறுவதற்காக இந்த குடும்ப, இளையர் மேம்பாட்டு நிதியைத் தொடங்கியுள்ளது.

ஏறக்குறைய 500 வசதிகுறைந்த குடும்பங்கள், 400 இளையர்கள் கொண்ட 900 பயனாளர்களை ஆதரிப்பதற்காக 2024ல் கிட்டத்தட்ட $500,000 திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

4பிஎம் என்பது மலாய் இளையர் இலக்கிய கழகத்தைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் மலாய் மற்றும் முஸ்லிம் குடும்பங்களை ஆதரிக்கிறது.

பொதுமக்கள் www.4pm.sg என்ற எண்ணில் இந்த நிதிக்கு நன்கொடை அளிக்கலாம்.

குறிப்புச் சொற்கள்