பதினைந்து வயது சிறுமியுடன் பணம் கொடுத்து பாலியல் உறவு கொண்ட 39 வயது ஆடவர் ஒருவர் அதைப் படம் பிடித்தார்.
வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) அந்த ஆடவருக்கு 25 மாதச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன் தொடர்பில் பெஞ்சமின் ஹுவாங் ஜுன்லோங் என்ற ஆடவர் 15 வயது சிறுமியுடன் பாலியல் உறவு கொண்ட குற்றம், அதைப் படம்பிடித்த மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை ஒப்புக்கொண்டார்.
அவருடைய தண்டனை விதிப்பின்போது மேலும் எட்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.
ஆடவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் அவரால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களின் வயது 15, 21, 25 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களில் இளம் வயது பெண்களை அந்த ஆடவர் ‘சுகர்புக்’ என்ற பணத்துக்காக காதல் சந்திப்புகளை ஏற்படுத்தித் தரும் இணையத்தளத்தின் வழி தொடர்பு கொண்டுள்ளார். மூன்றாவது, சற்று வயது அதிகமான மாதை அவர் ‘டிண்டர்’ இணையத்தளத்தின் வழி தொடர்புகொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.