மக்கள் பேராதரவால் ‘லீ குவான் யூ’ கண்காட்சி நீட்டிப்பு

1 mins read
7d4171fb-c9f5-4cdc-80ac-4eb0baf31c4e
திரு லீ குவான் யூ கடந்து வந்த பாதையை சித்திரிக்கிறது இந்த அனுபவக் கண்காட்சி.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுமக்களிடமிருந்து கிடைத்த பெரும் வரவேற்பால் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் வாழ்க்கை வரலாற்றை விமரிசையாக சித்திரிக்கும் ‘லீ குவான் யூ: ஓர் அனுபவம்’ அனுபவக் கண்காட்சி மார்ச் 17ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நவீன சிங்கப்பூரின் தந்தையான திரு லீ குவான் யூ கடந்து வந்த நூற்றாண்டுப் பாதையை காட்சிப்படுத்தியுள்ள இந்த அனுபவக் கண்காட்சி, கடந்த அக்டோபர் 2023ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், அவரின் பெருமையை பாடிய பல மக்களின் உன்னதமான கருத்துகளும் இதில் ஓர் அங்கமாகும்.    

11 பிரின்செப் லிங்க்கில் அமைந்துள்ள இந்த அனுபவக் கண்காட்சிக்கான கட்டணம் $18. நுழைவுச்சீட்டுகளை மக்கள் https://www.pelago.co/en-SG/activity/pziq8 எனும் இணையத்தளம் வழியாக வாங்கலாம்.

இந்தக் கண்காட்சி தற்போது வியாழன் முதல் ஞாயிறு வரை இடம்பெறுகிறது. மேல் விவரங்கள் அறிய http://lkyexperience.com/ எனும் இணையத்தளத்தை நாடலாம்.  

குறிப்புச் சொற்கள்