அங் மோ கியோவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘வெடிகுண்டு’ உண்மையானதல்ல

அங் மோ கியோவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘வெடிகுண்டு’ உண்மையானதல்ல

1 mins read
327cc104-f047-4bc0-88af-26b150da6286
கண்டுபிடிக்கப்பட்ட பொருள் பாதுகாவல் நிறுவனம் ஒன்றினால் பாவனைப் பயிற்சி நடத்திய பிறகு விட்டுச் செல்லப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஷின்மின்
Google News Preferred Icon

அங் மோ கியோவில் உள்ள தொழில்துறைப் பூங்கா 2ல், பார்க்க வெடிகுண்டு போல இருந்த பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஜனவரி 5ஆம் தேதி காலை 8.20 மணி அளவில் இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சோதனை நடத்தினர்.

அந்தப் பொருள் உண்மையான வெடிகுண்டு அல்ல என்று தெரியவந்தது.

பாதுகாவல் நிறுவனம் ஒன்று அங்கு பாவனைப் பயிற்சி நடத்தியதாகவும் அதன்பிறகு அந்தப் பொருளை அங்கேயே விட்டுச் சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்தக் கவனக்குறைவான செயலால் காவல்துறை சம்பவ இடத்துக்கு விரைந்துச் செல்ல வேண்டி இருந்ததாகவும் அந்தத் தொழில்துறைப் பூங்காவில் பணிபுரியும் 100க்கும் மேற்பட்டோருக்கு அசௌகரியம் ஏற்பட்டதாகவும் காவல்துறை கூறியது.

இந்த விவகாரம் குறித்து அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்