சாலை விபத்தில் 75 வயது மாது மரணம், டாக்சி ஓட்டுநர் கைது

சாலை விபத்தில் 75 வயது மாது மரணம், டாக்சி ஓட்டுநர் கைது

1 mins read
d482d964-ca0f-448d-9baf-32f77b1d8d08
எம் சோஷியல் ஹோட்டலுக்கு எதிரே, மாது சாலையைக் கடக்கும்போது விபத்து நடந்ததாக ஷின் மின் டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது. - படம்: ஷின் மின் டெய்லி

சாலை விபத்தில் வயதான நடையர் உயிரிழந்ததை அடுத்து டாக்சி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புளோக் 90 ராபர்ட்ஸன் கீயில் ஜனவரி 6ஆம் தேதி பிற்பகல் நிகழ்ந்த சாலை விபத்து குறித்து மாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக காவல்துறையினரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரும் தொடர்புகொண்டபோது தெரிவித்தனர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 75 வயது மாது மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை விளைவித்த குற்றத்திற்காக 67 வயது முதியவரான அந்த டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார் என்று கூறிய காவல்துறை, சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என்றும் கூறியது.

எம் சோஷியல் ஹோட்டலுக்கு எதிரே, அந்த மாது சாலையைக் கடக்கும்போது விபத்து நடந்ததாக சீன ஊடக நிறுவனமான ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்