பாசாங்கு செய்து சிகிச்சை பெற்றவருக்குச் சிறை

1 mins read
74134911-efcb-42a9-b10b-fa1faeddfdf4
லோகேஸ்வரன் மோகன்தாஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முதுகு வலி காரணமாக 42 வயது லோகேஸ்வரன் மோகன்தாஸ், பல்வேறு மருத்துவமனைகளிலும் பலதுறை மருந்தகங்களிலும் சிகிச்சை பெற்றுக்கொண்டார்.

ஆனால் சிகிச்சைக்காகப் பதிவு செய்துகொள்ள அவர் தமது சகோதரரின் பெயரையும் தமக்குத் தெரிந்தவர் ஒருவரின் பெயரையும் பயன்படுத்தினார்.

இதனால் சிகிச்சைகளுக்கான கட்டணத்தைச் செலுத்துமாறு அந்த இருவருக்கும் ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

மற்றவர்களைப் போல பாசாங்கு செய்து ஏமாற்றிய குற்றத்துக்காக சிங்கப்பூரரான லோகேஸ்வரன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

லோகேஸ்வரன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

ஜனவரி 8ஆம் தேதியன்று அவருக்கு ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்