உட்லண்ட்சின் வடக்கு கடற்கரைப் பகுதியில் வான்வழி நடவடிக்கைகளுக்குத் தடை

1 mins read
c4bf9cdd-022d-4aa1-a93b-da1555b59c7f
வரும் ஜனவரி 11ஆம் தேதி, காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை உட்லண்ட்சின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் வான்வழி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்சின் வடக்கு கடற்கரைப் பகுதிகளில் பட்டம் விடுதல், ஆளில்லா வானூர்தி போன்ற விமானங்களைப் பறக்க விடுதல் உள்ளிட்ட அனைத்து வான்வழி நடவடிக்கைகளும் வரும் ஜனவரி 11ஆம் தேதி தடை செய்யப்படும் என சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

தற்காலிகத் தடை விதிக்கப்பட்ட அப்பகுதியில் அன்று காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை தடை அமலில் இருக்கும் என இது தொடர்பாக ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

அப்பகுதியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி ஒன்றிற்காக இக்கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிகழ்ச்சி குறித்து வேறு எந்தத் தகவலையும் தற்போது அளிக்க முடியாது என்றும் ஆணையம் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

நிலத்துடன் அல்லது நிலத்திலுள்ள ஒரு பொருளுடன் இணைக்கப்பட்ட ஆளில்லா ராட்சத பலூன்களை மேலேற்றுவதும் அனுமதிக்கப்படாது என ஆணையம் மேலும் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்