சுகாதாரக் குறைபாடுகளுக்காக ‘கேஷுரினா கறி’ உணவகத்துக்கு இரண்டு வாரத் தடை

சுகாதாரக் குறைபாடுகளுக்காக ‘கேஷுரினா கறி’ உணவகத்துக்கு இரண்டு வாரத் தடை

1 mins read
99a66fe2-250f-4451-8334-18f3de6ee91f
தனது பரோட்டாவுக்காக புகழ்பெற்ற ‘கேஷுரினா கறி’ உணவகம். - படம்: இணையம்

இந்திய உணவுப் பிரியர்களிடையே பிரபலமான ‘கேஷுரினா கறி’ உணவகத்தில் கரப்பான்பூச்சிகள் தென்பட்டதால், சிங்கப்பூர் உணவு அமைப்பு அதற்கு இரண்டு வாரத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

எண் 136, 138 கேஷுரினா ரோடு, செம்பவாங் ஹில் எஸ்டேட் எனும் முகவரியில் உள்ள அந்த உணவகத்தின் தடை ஜனவரி 9ஆம் தேதி முதல் ஜனவரி 22ஆம் தேதி வரை நீடிக்கும்.

உணவகத்தில் பூச்சிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள தவறியதற்காகவும் சுகாதாரமற்ற உணவை விற்றதற்காகவும் அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு $800 அபராதமும் விதிக்கப்பட்டது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குற்றத்துக்கும் அந்த உணவத்துக்கு ஆறு தண்டனைப் புள்ளிகள் விதிக்கப்பட்டன.

12 மாதங்களுக்குள் 12 அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனைப் புள்ளிகள் பெறும் உரிமையாளரின் உரிமம் நான்கு வாரங்களுக்குத் தடை செய்யப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்