தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடல்நாக ஆண்டுக் கொண்டாட்டம்; சிங்க,கடல்நாக நடனக் குழுக்களுக்கு மவுசு கூடுகிறது

1 mins read
f95cd892-c5db-4bed-9d79-80c83f678f9b
சியோங் செங் கடல்நாக, சிங்க நடனக் குழு சங்கம் அதிக பயிற்சிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. - படம்: ‌ஷின் மின் நாளிதழ்

வருகிற கடல்நாக சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டதையொட்டி சிங்க, கடல்நாக நடனக் குழுக்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. இதையறிந்து நடனக் குழுக்களும் தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

அத்தகைய குழுக்களில் ஒன்றான, நிக்கிஇஸ்எவ்ரிவேர் டீம் குவான் ஷென் டிராகன், லயன் டான்ஸ்’ நிலையத்திற்கு தற்போதைய நிலவரப்படி ஜனவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 29ஆம் தேதி வரை 28 நடன நிகழ்ச்சிகளை நடத்த அழைப்பு வந்துள்ளது.

சீனப் புத்தாண்டையொட்டி இத்தகைய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக அதன் நிறுவனரான நிக் ஓங் கூறியுள்ளார்.

2020 முதல் 2022 வரையிலான இதே காலகட்டத்துடன் ஒப்பிட்டால் 2024ல் 60 முதல் 250 விழுக்காடு வரை அழைப்புகள் கூடியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

“ஒவ்வொரு நாளும் ஆட்பற்றாக்குறை குறித்து கவலைப்படுகிறேன். என்னால் என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு நடன நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் போகலாம்,” என்று அவர் வருத்தப்பட்டார்.

வழக்கமாக அவரது நடனக் குழு வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பயிற்சியில் ஈடுபடும்.

ஆனால் சீனப் புத்தாண்டு நெருங்குவதால் நான்கு முறை அல்லது அதற்கு மேல் பயிற்சிகளில் ஈடுபட அவரது குழு திட்டமிட்டுள்ளது.

2024 பிப்ரவரி 10ஆம் தேதி கடல்நாக சந்திரப் புத்தாண்டின் முதல் நாளாகும். பல வீடுகள் மற்றும் வர்த்தகங்கள் தங்களுடைய இடங்களில் அதிர்ஷ்டத்தை வரவேற்க சிங்க, கடல்நாக நடனங்களை நடத்த விரும்புகின்றன.

குறிப்புச் சொற்கள்