ஆபத்தான ஆயுதம் வைத்திருந்ததாக செங்காங்கில் 20 வயது ஆடவர் கைது

1 mins read
178de3c4-7e63-48a1-9f25-78a5fb3cb369
சம்பவம் நடைபெற்ற குடியிருப்புக் கட்டடமும் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காவல்துறை வாகனங்களும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஆபத்தான ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக செங்காங்கில் 20 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) பிற்பகல் 2.10 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததாக, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் காவல்துறை தெரிவித்தது.

தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து விரைந்து சென்ற ஏழு காவல்துறை அதிகாரிகள், காம்பஸ்வேல் போவ், புளோக் 278ஏ குடியிருப்புக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தை நோக்கிச் சென்றதைக் காணமுடிந்தது.

மாலை 4.40 மணியளவில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் அந்த இடத்துக்குச் சென்றபோது புளோக்கின் அருகே காவல்துறை வாகனங்களும் புலன்விசாரணைப் பிரிவின் வேன் ஒன்றும் காணப்பட்டன.

அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் தம்மை நோக்கி வந்த காவல்துறை அதிகாரிகள், கத்தியுடன் திரிந்த ஆடவர் ஒருவரை காணமுடிந்ததா என்று தம்மிடம் கேட்டதாக கட்டுமான ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர் புளோக்கில் வசிக்கும் பெண்மணி ஒருவர் கூறுகையில், “பிற்பகல் 2.30 மணியளவில் ஏராளமான காவல்துறை அதிகாரிகளையும் குறைந்தபட்சம் 10 கார்களையும் அந்த வட்டாரத்தில் கண்டதாக பல குடியிருப்பாளர்கள் பேசிக்கொண்டனர்,” என்றார்.

கைது செய்யப்பட்ட ஆடவரிடம் விசாரணை தொடருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்