தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் 15.8% அதிகரிப்பு

1 mins read
8f5e7730-2e27-495a-b9cd-a7e8ff688ca3
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் பயணிகள் கட்டமைப்பு 35 நாடுகளில் 121 இடங்களை இணைக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்சில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 15.8 விழுக்காடு ஏற்றம் கண்டது.

பயணிகள் எண்ணிக்கை, பயணத் தூரம் ஆகியவற்றின் அடிப்படையிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 15 விழுக்காடு அதிகரித்து 10.1 பில்லியனாகப் பதிவானது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்தின் மலிவுக் கட்டண விமானச் சேவையான ஸ்கூட்டிற்கான பயணிகள் எண்ணிக்கை, பயணத் தூர அடிப்படையிலான விகிதிம் 18.5 விழுக்காடு உயர்ந்து மூன்று பில்லியனாகப் பதிவானது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்சிலும் ஸ்கூட்டிலும் மொத்தம் 3.3 மில்லியன் பேர் பயணம் செய்தனர்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 24.4 விழுக்காடு அதிகம்.

சிங்கப்பூர் ஏர்லைன்சில் ஏற்றிச் செல்லப்பட்ட சரக்குகளின் அளவு ஆண்டு அடிப்படையில் 4.3 விழுக்காடு உயர்ந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் பயணிகள் கட்டமைப்பு 35 நாடுகளில் 121 இடங்களை இணைக்கிறது.

சீனாவின் சியாமன் நகருக்கான விமானச் சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 76 இடங்களுக்கும் ஸ்கூட் 67 இடங்களுக்கும் விமானச் சேவைகளை வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்