தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருவள்ளுவரின் ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது: பிரதமர் மோடி

1 mins read
bb156a75-5641-44fe-a40e-5e1364061145
படம்: - இந்திய ஊடகம்

சென்னை: தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், “தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது,” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் திங்கட்கிழமை (ஜனவரி 15) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, “தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று (ஜனவரி 16) நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது. காலத்தால் அழியாத அவரது போதனைகள் நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. அவர் எடுத்துரைத்த அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்துவோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்