தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பூட்டான் -சிங்கப்பூர் இடையே இருதரப்பு உறவை வலுப்படுத்த தலைவர்கள் ஆலோசனை

1 mins read
368b686c-b806-4863-abb6-fbc8ca299b3d
பிரதமர் லீ சியன் லூங், பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் இருவரும் புருணையில் சந்தித்துப் பேச்சு நடத்தினர். - படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

சிங்கப்பூருக்கும் பூட்டானுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் லீ சியன் லூங்கும், பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கும் விவாதித்துள்ளனர்.

இரு தலைவர்களும் புருணையில் சந்தித்துப் பேச்சு நடத்தியதாக வெளியுறவு அமைச்சு ஜனவரி 16ஆம் தேதி தெரிவித்தது.

பிரதமர் லீ ஜனவரி 13 முதல் 15 வரை புருணை இளவரசர் அப்துல் மட்டீன் - அனிஷா அரச திருமணத்தில் கலந்துகொண்டார்.

புருணை பயணத்தின்போது ​​பிரதமர் லீ ஜனவரி 15ஆம் தேதி புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவையும் சந்தித்தார்.

இருநாடுகளுக்கும் இடையிலான அணுக்க உறவுகளுக்கு இரு தலைவர்களும் தங்கள் கடப்பாட்டை மறுஉறுதிப்படுத்தினர் என்று அமைச்சு குறிப்பிட்டது. 2024 ஜனவரி 15ஆம் தேதி அன்று சிங்கப்பூர் - புரூணை இடையிலான அரசதந்திர உறவு 40 ஆண்டு நிறைவை எட்டியதை பிரதமர் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்