லிட்டில் இந்தியா பொங்கல் ஏற்பாடுகள்: 360 டிகிரி காணொளி

1 mins read
5889beef-2507-4e30-9f0a-2a33679a8cf4
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ் முரசு இந்தச் சிறப்புக் காணொளியைத் தயாரித்துள்ளது. - படம்: தமிழ் முரசு

இந்த ஆண்டின் பொங்கல் திருவிழாவிற்காக லிட்டில் இந்தியா வட்டாரத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மெய்நிகர்த் தோற்றத்தில் காட்சிப்படுத்தும் முதல் முயற்சியாக தமிழ் முரசு புதிய மெய்நிகர் காணொளியைத் தயாரித்துள்ளது.

நேரிலேயே பார்க்கும் அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த 360 டிகிரி கோண வடிவிலான காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது.

பஃப்ளோ ரோடு பூக்கடைகள் முதல் கிளைவ் ஸ்திரீட்டில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மாடுகள் வரை பார்வையாளர்கள் இந்தக் காணொளியில் பல்வேறு அம்சங்களைக் கண்டு மகிழலாம்.

கேம்பல் லேனில் பொங்கல் பானை, கரும்பு, உணவுப் பொருள்கள், சிராங்கூன் சாலையில் மின்னும் ஒளியூட்டு, பொங்கலுக்காகப் புதிதாக விற்பனைக்கு வந்த ஆடைகள், சிலைகள் முதலியவை இந்தக் காணொளியில் இடம்பெறுகின்றன.

கண்டு ரசியுங்கள்!

குறிப்புச் சொற்கள்