தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனைவி பகிர்வு வழக்கு: மேல்முறையீடு நிராகரிப்பு

1 mins read
5745f270-2a51-497c-ac18-20a0aaee6657
மனைவிக்குக் கொடுமை இழைத்த ஆடவர் புரிந்த குற்றங்களைக் கருத்தில் கொள்ளும்போது அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கடுமையானதல்ல என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் சுயநினைவு இழந்ததும் அவரை ஐந்து ஆடவர்களுடன் பகிர்ந்துகொண்ட ஆடவருக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

அந்த ஐந்து ஆடவர்களும் அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

அந்த ஐவரில் இருவரின் மனைவிகளையும் அந்த ஆடவர் வன்கொடுமை செய்தார்.

மனைவிகளைப் பகிர்ந்துகொள்ளும் நோக்கில் அந்த ஆடவர்கள் அனைவரும் செயல்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அந்த ஆடவர் மேல்முறையீடு செய்தார்.

தாம் செய்தது மிகப் பெரிய தவறு என்பதைத் தாம் உணர்ந்துவிட்டதாகவும் தண்டனையை குறைத்துக் கருணை காட்டுமாறும் அந்த ஆடவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அந்த ஆடவரின் கோரிக்கையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஏற்க மறுத்தது.

அந்த ஆடவர் புரிந்த குற்றங்களைக் கருத்தில் கொள்ளும்போது அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை கடுமையானதல்ல என்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்