தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூட்டுரிமை வீட்டு வாடகை குறைந்தது; வீவக வாடகை ஏறியது

1 mins read
ebef7061-c052-4396-aad6-e3a1f7cda144
கூட்டுரிமை வீடுகளின் வாடகை சரிந்தாலும் வீவக வீடுகளின் வாடகை சற்றுக் கூடியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனியார் அடுக்குமாடி வீடுகளின் வாடகை தொடர்ந்து 5வது மாதமாக 2023 டிசம்பரில் குறைந்தது. 2023 முதல் பாதியில் கண்ட வளர்ச்சியிலிருந்து அது சரிந்துள்ளது. அதே சமயத்தில் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வாடகை தொடர்ந்து வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

2023 நவம்பரிலிருந்து கூட்டுரிமை வீடுகளின் வாடகை 0.5 விழுக்காடு குறைந்தது. சிங்கப்பூர் ரியல் எஸ்டேட் எக்சேஞ்ச், ‘99.co’ ஆகிய இணையத் தளங்கள் ஜனவரி 18ஆம் தேதி வெளியிடப்பட்ட தரவுகளிலிருந்து இது தெரிய வருகிறது.

ஆனால் 2022 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த கூட்டுரிமை வீடுகளின் வாடகை 2.6 விழுக்காடு அதிகமாக இருந்தது.

2023 டிசம்பரில் வாடகைக்கு விடப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அதாவது அம்மாதத்தில் 5,644 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2023 டிசம்பரில் வீவக வாடகை ஒரு விழுக்காடு கூடியது. முதிர்ச்சியடைந்த பேட்டைகளில் வாடகை 1.2 விழுக்காடும் முதிர்ச்சியடையாத பேட்டைகளில் ஒரு விழுக்காடும் ஏறியது.

மூவறை வீட்டு வாடகை ஆக அதிகமாக 2.1 விழுக்காடு கூடியது.

ஆண்டு அடிப்படையில் ஒட்டுமொத்த வீவக வீடுகளின் வாடகை 10.1 விழுக்காடு அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பருடன் ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் வாடகைக்கு விடப்பட்ட வீவக வீடுகளின் எண்ணிக்கை 7.4 விழுக்காடு கூடியது. அதாவது 2,891 வீடுகள் வாடகைக்கு விடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்