பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட பகுதிநேர சமயப் போதகருக்கு சிறைத் தண்டனை, பிரம்படி

1 mins read
b4d92ce1-2c97-4aa8-af81-481b73115ff4
படம்: - பிக்சாபே

நான்கு சிறுவர்களுடன் பல்வேறு பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபட்ட பகுதி நேர தன்னிச்சையான சமய போதகருக்கு 21½ ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 8 பிரம்படிகளும் தண்டனைகளாக செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது.

35 வயதான அந்தச் சமய போதகருக்கு எச்ஐவி கிருமித்தொற்று உண்டு எனக் கூறப்பட்டது.

சாங்கி கடற்கரை அருகே காவல்துறை அதிகாரிகள் வழக்கமாக சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்தபோது அவர் சிக்கினார் என்றும் அவருடைய கைப்பேசியில் சிறார் ஆபாசப் படங்கள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாலியல் சேவைக்கு $75 பணம் தருவதாக அவர் ஒரு சிறுவனுக்கு அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை அதிகாரிகள் அவரின் கைப்பேசியில் பார்த்தனர். அதனையடுத்து காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

18 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுடன் பாலியல் செய்கையில் ஈடுபட்டதற்காக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் 8ஆம் தேதி ஒப்புக்கொண்டார்.

தண்டனை வழங்கும்போது அவர்மீது சுமத்தப்பட்ட மற்ற 18 குற்றச்சாட்டுகளும் கருத்தில் எடுத்துகொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்