போக்குவரத்து அமைச்சராக சீ ஹொங் டாட் பதவி ஏற்பு

போக்குவரத்து அமைச்சராக சீ ஹொங் டாட் பதவி ஏற்பு

1 mins read
8724da3a-eed7-4afa-8581-115fb3fd5e23
அதிபர் தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட சீ ஹொங் டாட். - படம்: தொடர்பு தகவல் அமைச்சு

போக்குவரத்து அமைச்சராகவும் நிதி இரண்டாம் அமைச்சராகவும் திரு சீ ஹொங் டாட் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 23) பதவி ஏற்றுக்கொண்டார். இஸ்தானாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் அவர் பதவி ஏற்றார்.

அந்நிகழ்வை தாம் பார்வையிட்டதாக பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

சிங்கப்பூர் ஓர் ஆகாய, கடல்வழி மையமாக உலகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு வரும் முக்கியமான தருணத்தில் திரு சீ பதவி ஏற்றுள்ளதாக திரு லீ குறிப்பிட்டார்.

போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து எஸ். ஈஸ்வரன் விலகியதைத் தொடர்ந்து திரு சீ அப்பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்