$541,000 ஏமாற்றப்பட்ட சம்பவத்தில் மூவர் மீது குற்றச்சாட்டு

$541,000 ஏமாற்றப்பட்ட சம்பவத்தில் மூவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
997f372a-ac0b-4265-b8b9-afa044887295
படம் - தமிழ் முரசு

மூவர் இணைந்து செயல்பட்ட மோசடி முதலீட்டுத் திட்டத்தில் இருவர் மொத்தம் $541,000 இழந்தனர். இதில் காங் சீ வீ, லிம் ஜுன் ஹோங், 35, ஆகிய இருவர் மீதும் ஜனவரி 24ஆம் தேதி தலா நான்கு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

லிம், பல நிறுவனங்களில் இயக்குநராகவும் பங்குதாரராகவும் இருப்பதாக, கணக்காய்வியல், நிறுவனக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்தது.

மூன்றாவது நபரான 28 வயது டெக்ஸ்டர் லாவ் யூ ஹோங் மீது இரண்டு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

2016 நவம்பர் முதல் 2017 பிப்ரவரி வரை கூட்டுச் சதித்திட்டத்தில் ஈடுபட்ட அம்மூவரும், தங்கள் முதலீடுகள் 1மெல்ட்ஸ் என்ற அமெரிக்காவைத் தளமாகக்கொண்ட ஒரு நிறுவனத்திற்கானது என்று கூறி முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக காவல்துறை ஜனவரி 24ஆம் அன்று தெரிவித்தது.

28 நாள்களில் 40 விழுக்காடு உறுதியான வருமானம் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது,

இந்த மூவர் மீதான வழக்குகள் பிப்ரவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்