தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஸ்டாக்ஹோம் மெட்ரோ ஒப்பந்தத்தை கம்ஃபர்ட்டெல்குரோ கூட்டு நிறுவனம் பெற்றது

1 mins read
9f34232e-bea2-491d-b587-a3c59d1932da
ஸ்டாக்ஹோம் ரயில் சேவையை (மெட்ரோ) இயக்கவும் பராமரிக்கவும் பிரிட்டிஷ் போக்குவரத்துக் குழுமத்தைச் சேர்ந்த கோ எகெட் - கம்ஃபர்ட்டெல்குரோ கூட்டு நிறுவனம் (ஜேவி.) ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஸ்டாக்ஹோம் ரயில் சேவையை (மெட்ரோ) இயக்கவும் பராமரிக்கவும் பிரிட்டிஷ் போக்குவரத்துக் குழுமத்தைச் சேர்ந்த கோ எகெட் - கம்ஃபர்ட்டெல்குரோ கூட்டு நிறுவனம் (ஜேவி.) ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

அந்த 11 ஆண்டு ஒப்பந்தம், 2025 மே மாதம் தொடங்கும்.

இது போக்குவரத்துக் குழுமம் சுவீடனில் பெற்றுள்ள முதல் ரயில் ஒப்பந்தம் என்பதுடன் சிங்கப்பூருக்கு வெளியே உள்ள மிகப்பெரிய பயணிகள் ரயில் செயல்பாடாகும் என்று ஜனவரி 24ஆம் தேதி அன்று கம்ஃபர்ட்டெல்குரோ கூறியது.

ஸ்டாக்ஹோமை இணைக்கும் ஜேவி, ஸ்டாக்ஹோம் மெட்ரோவின் ஏழு ரயில் தடங்களை உள்ளடக்கும்.

இதில் 100 நிலையங்கள், ஆறு பராமரிப்புச் சேவை நிலையம் 107 கிலோ மீட்டர் தண்டவாளம் அடங்கும்.

வாடிக்கையாளர் சேவை, ரயில் சேவைகளைத் திட்டமிடுதல், வழங்குதல், அத்துடன், ரயில்களின் எண்ணிக்கை, நிலையம், பராமரிப்புச் சேவை நிலையம் ஆகியவற்றின் வசதி பராமரிப்புக்கும் போக்குவரத்துக் குழுமம் பொறுப்பாக இருக்கும்.

குறிப்புச் சொற்கள்