கொண்டாட்ட உணர்வு: டெக் கீயில் 500 மூத்தோர் ஒன்றுகூடல்

கொண்டாட்ட உணர்வு: டெக் கீயில் 500 மூத்தோர் ஒன்றுகூடல்

1 mins read
1f7652d9-89c1-4174-b905-7bbd0522d694
ரொக்கமும் பேரங்காடிப் பற்றுச்சீட்டும் அடங்கிய ஆங் பாவ் உறைகளை பிரதமர் லீ சியன் லூங் அன்பளிப்பாக வழங்கினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

டெக் கீ வட்டாரத்தில் வசிக்கும் ஏறக்குறைய 500 மூத்தோர் ஞாயிற்றுக்கிழமை டெக் கீ சமூக மன்றத்தில் ஒன்றுகூடினர்.

சீனப் புத்தாண்டு காலத்தில் கொண்டாட்ட உணர்வை மூத்தோரிடையே பரப்ப டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழு இந்த ஒன்றுகூடல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது.

சிற்றுண்டி வரவேற்பில் பங்கேற்ற மூத்த குடிமக்கள், மேடை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். தொடர்ந்து பிரதமரும் அங் மோ கியோ குழுத்தொகுதியின் அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான லீ சியன் லூங்கிடம் இருந்து அவர்கள் ஆங்பாவ் உறைகளைப் பெற்றுக்கொண்டனர். ரொக்கத்துடன் பேரங்காடிப் பற்றுச்சீட்டும் அந்த ஆங்பாவ் உறைகளில் இருந்தன.

இந்நிகழ்வில் பங்கேற்ற பிரதமர் லீ, கெபுன் பாரு சந்தை மற்றும் உணவு நிலையத்திற்கும் அருகிலுள்ள புளோக்குகளுக்கும் சென்று குடியிருப்பாளர்களிடம் சீனப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்