மானபங்க விவகாரம்: சிறைத் தண்டனையிலிருந்து தப்பிய முன்னாள் என்யுஎஸ் விரிவுரையாளர்

மானபங்க விவகாரம்: சிறைத் தண்டனையிலிருந்து தப்பிய முன்னாள் என்யுஎஸ் விரிவுரையாளர்

1 mins read
5420245b-4c32-4490-a88d-36420c9d77f0
முன்னாள் என்யுஎஸ் விரிவுரையாளர் ஜெரிமி ஃபெர்னாண்டோ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மானபங்க வழக்கு ஒன்றில் முன்னாள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (என்யுஎஸ்) விரிவுரையாளரான ஜெரிமி ஃபெர்னாண்டோ சிறைத் தண்டனையிலிருந்து தப்பினார்.

பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுபவருடன் இணக்கமான முறையில் தீர்வுகாண ஒப்புகொள்ளப்பட்ட பிறகு டாக்டர் ஃபெர்னாண்டோவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தம் குறித்த தகவல்கள் நீதிமன்றத்தில் வெளியிடப்படவில்லை.

தெம்பூசு கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றிய டாக்டர் ஃபெர்னாண்டோ திங்கட்கிழமையன்று (29 ஜனவரி) குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதனால் இதே குற்றச்சாட்டுகளை இனி அவர் மீது சுமத்த முடியாது.

ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தியதாக 44 வயது டாக்டர் ஃபெர்னாண்டோ மீது குற்றம் சுமத்தப்பட்டது. சட்டப்படி சில குற்றங்களுக்கு மட்டுமே இணக்கமான தீர்வை எட்ட முடியும்.

பொதுவாக பாதிக்கப்பட்டவருக்கு ஒரு தொகையை வழங்கியோ மன்னிப்புக் கேட்டுக்கொண்டோ வழக்குகளில் இணக்கமான தீர்வு எட்டப்படும்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்குற்றம்நீதிமன்றம்மானபங்கம்