$92 மில்லியன் இழப்பீடு கோரும் யுஓபி வங்கி

$92 மில்லியன் இழப்பீடு கோரும் யுஓபி வங்கி

1 mins read
d93e1f0c-d038-4aee-a9cc-b7e313bbe4d3
செந்தோசா கோவ்வில் உள்ள மரினா கலெக்‌ஷன் கூட்டுரிமை வீடுகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்தோனீசிய சொத்து மேம்பாட்டாளர் லிப்போ மரினா கலெக்‌ஷனிடமிருந்து (எல்எம்சி) யுஓபி வங்கி $92 மில்லியன் இழப்பீடு கோருகிறது.

அளவுக்கு அதிகமான வீட்டுக் கடன்களாக ஏறத்தாழ $182 மில்லியன் வழங்கப்பட்டதில் இழப்பு ஏற்பட்டதை அடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக யூஓபி நடவடிக்கை எடுத்துள்ளது.

யூஓபி நிதி வழங்கவிருந்த சொத்துகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்ய சொத்து முகவர்களுடன் எல்எம்சி சதித்திட்டம் தீட்டியதாக நீதிமன்றம் கூறியது.

யூஓபி வங்கிக்கு வழங்கப்பட இருக்கும் இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க மூன்று நாள் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது.

வழக்கு விசாரணை ஜனவரி 29ஆம் தேதியன்று தொடங்கியது.

குறிப்புச் சொற்கள்