தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை: சந்தேக நபர் மீது 11 புதிய குற்றச்சாட்டுகள்

1 mins read
5f6eceb3-7c71-4855-9017-6f19e52226a4
படம். - தமிழ் முரசு

கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வான் ஷியுமிங் என்பவர் மீது புதன்கிழமை (ஜனவரி 31) அன்று மேலும் 11 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

யுஓபி கே ஹியன் நிறுவனத்திடம் ஆவணங்கள் சமர்ப்பிக்கும் விவகாரத்தில் வாங், ஸியாமென் மிங்ஸின் கேரண்டி, ஸியாமென் யேதியன் டிரேடிங், ஸியாமென் லிகாங்ஹாங் டிரேடிங் ஆகிய நிறுவனங்களில் இருந்து போலியான நிதி தொடர்பான ஆவணங்கள் சமர்ப்பித்ததாக வாங் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த நிதி ஆவணங்கள் 2015ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரையிலானவை.

அந்த ஆவணங்களில் எந்தெந்த வாசகங்கள் பொய்யானைவை என்ற விளக்கம் அளிக்கப்படவில்லை.

குற்றச்சாட்டுகளில் வாங் துருக்கிய குடிமகன் என்று கூறப்படும் நிலையில் அவர் மீது தற்பொழுது 16 குற்றச்சாட்டுகள் உள்ளன.

வாங் மீது மேற்கொண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுமா என அவரது வழக்கறிஞர் அரசு காவல் துறை அதிகாரியைக் கேட்டபோது அது குறித்து தம்மிடம் எவ்விதத் தகவலும் இல்லை என்று காவல் துறை அதிகாரி பதிலளித்தார்.

குறிப்புச் சொற்கள்