வரம்பை மீறி வாடகையை உயர்த்த முயன்றவருக்கு எதிராகத் தீர்ப்பு

வரம்பை மீறி வாடகையை உயர்த்த முயன்றவருக்கு எதிராகத் தீர்ப்பு

1 mins read
fd5b5398-f07d-41c7-835f-5500d963e613
டேஷ் லிவிங் நிறுவனத்துக்குச் சாதகமாக ஜனவரி 30ஆம் தேதியன்று மூத்த நீதிபதி டான் சியோங் தாய் தீர்ப்பளித்தார். - படம்: இணையம்

மெக்கென்சி சாலையில் அமைந்துள்ள ஆறு மாடி ஹோட்டலின் உரிமையாளர் அதற்கான வாடகையை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த வரம்பைவிட அதிகமான தொகைக்கு உயர்த்த முயன்றார்.

இதை எதிர்த்து ஹோட்டலைக் குத்தகைக்கு எடுத்து நடத்திய டேஷ் லிவிங் நிறுவனம் வழக்கு தொடுத்தது.

இந்நிலையில், ஹோட்டல் உரிமையாளரும் கிம் சான் ரியால்ட்டி நிறுவனத்தின் இயக்குநருமான திரு ஹூன் கீ மெங்கிற்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கபட்டுள்ளது.

ஹோட்டலின் தற்போதைய குத்தகைக்காலம் இவ்வாண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், குத்தகைக்காலத்தைப் புதுப்பிக்க திரு ஹூன் திட்டமிட்டார்.

அதற்கு மாத வாடகையாக டேஷ் லிவிங் நிறுவனம் $76,000 செலுத்த வேண்டும் என்று அவர் நிர்ணயித்தார்.

ஆனால் தற்போதை $45,000 மாத வாடகையைவிட 10 விழுக்காட்டுக்கு மேல் உயர்த்தக்கூடாது என்று திரு ஹூனுக்கும் டேஷ் லிவிங் நிறுனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, டேஷ் லிவிங் நிறுவனத்துக்குச் சாதகமாக ஜனவரி 30ஆம் தேதியன்று மூத்த நீதிபதி டான் சியோங் தாய் தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்