தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிப்ரவரி 16 பிற்பகல் 3.30 மணிக்கு வரவுசெலவுத் திட்டம் தாக்கல்

2 mins read
53de9575-1c9a-4d8c-8c1c-e4be41d0b245
வரவுசெலவுத் திட்டம் தாக்கல் உள்ளூர் இலவச தொலைக்காட்சி ஒளிவழிகளிலும் உள்ளூர் வானொலியிலும் ஒளி, ஒலிபரப்பு செய்யப்படும் என்று நிதி அமைச்சும் அரசாங்க கருத்து சேகரிப்புப் பிரிவான ‘ரீ’ச்சும் மக்கள் கழகமும் பிப்ரவரி 1ஆம் தேதியன்று தெரிவித்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிப்ரவரி 16ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தைப் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தாக்கல் செய்கிறார்.

வரவுசெலவுத் திட்டம் தாக்கல் உள்ளூர் இலவச தொலைக்காட்சி ஒளிவழிகளிலும் உள்ளூர் வானொலியிலும் ஒளி, ஒலிபரப்பு செய்யப்படும் என்று நிதி அமைச்சும் அரசாங்க கருத்து சேகரிப்புப் பிரிவான ‘ரீ’ச்சும் மக்கள் கழகமும் பிப்ரவரி 1ஆம் தேதியன்று தெரிவித்தன.

ஒளிவழி 5, சிஎன்ஏ, சிஎன்ஏ 938, கெப்பிட்டல் 958, சிஎன்ஏ யூடியூப் ஒளிவழி, 8வோர்ல்ட் நியூஸ் ஃபேஸ்புக் பக்கம், மீடியாகார்ப்பின் மீவாட்ச் ஆகியவை அவற்றில் அடங்கும்.

வரவுசெலவுத் திட்டத்தை செவித்திறன் குன்றியோரும் பார்த்துப் புரிந்துகொள்ளும் வகையில் சிங்கப்பூர் செவித்திறன் குன்றியோர் சங்கம் சைகை மொழி விளக்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது.

வரவுசெலவுத் திட்டம் தொடர்பான முக்கிய அம்சங்கள் நிதி அமைச்சின் சமூக ஊடகத்திலும் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், லிங்க்ட்இன், எக்ஸ், வாட்ஸ்அப் ஆகிய தகவல் தளங்களிலும் பதிவேற்றம் செய்யப்படும்.

வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டவுடன் அதன் முழு அறிக்கை https://www.mof.gov.sg/singaporebudget எனும் இணையப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

வரவுசெலவுத் திட்டத்தின் முழு அறிக்கையை மின்னஞ்சல் மூலம் பெற விரும்புவோர் அது தாக்கல் செய்யப்பட்ட பிறகு, https://www.mof.gov.sg/email-subscription எனும் இணையப்பக்கத்துக்குச் செல்லலாம்.

வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து நிதி அமைச்சும் ரீச், மக்கள் கழகம் போன்ற அமைப்புகளும் பொதுமக்களிடமிருந்து கருத்து சேகரிக்க கலந்துரையாடல்களை நடத்தின.

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்டம் இணையப்பக்கம் உட்பட பல்வேறு கருத்து சேகரிப்புத் தளங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வரவுசெலவுத் திட்டம்