தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மிகவும் பாராட்டப்படும்நிறுவனம்; எஸ்ஐஏ 29வது இடம்

1 mins read
c8348e7f-8737-432a-ac9f-b203310bc7d3
இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ள ஃபோர்ட்சியூன் சஞ்சிகைப் பட்டியலில் ஆகச் சிறந்த 50 நிறுவனங்களில் எஸ்ஐஏ மட்டுமே ஒரே ஒரு சிங்கப்பூர் நிறுவனம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபோர்ட்சியூன் சஞ்சிகையின் மிகவும் பாராட்டப்படும் நிறுவனங்கள் பட்டியலில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) 29வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

3,720 நிர்வாகிகள், இயக்குநர்கள், பாதுகாப்புப் பகுப்பாய்வாளர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் ஜனவரி 31ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

தங்களுக்கு மிகவும் பிடித்தமான 10 நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும்படி ஆய்வில் பங்கெடுத்தவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு முதன்முதலாக 1997ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

ஒன்பது அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு நிறுவனங்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது.

நிர்வாகத் தரம், புத்தாக்கம், ஊழியர் நிர்வாகம், உலகளாவிய நிலையில் போட்டித்தன்மை ஆகியவை அவற்றில் அடங்கும்.

2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் எஸ்ஐஏ 31வது இடத்தைப் பிடித்தது.

2022ஆம் ஆண்டில் அது 32வது இடத்திலும் 2021ஆம் ஆண்டில் 34 இடத்திலும் இருந்தது.

இந்நிலையில், இவ்வாண்டு அது பட்டியலில் 29வது இடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஆகச் சிறந்த 50 நிறுவனங்களில் எஸ்ஐஏ மட்டுமே ஒரே ஒரு சிங்கப்பூர் நிறுவனம்.

குறிப்புச் சொற்கள்