‘ஷாப்பீ’யின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

‘ஷாப்பீ’யின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

1 mins read
ea34e119-49a2-416e-82cd-60681d7ee561
தனது முன்னாள் மூத்த ஊழியர் ஒருவர், தனது போட்டி நிறுவனத்தில் சேர்வதைத் தடுக்க ஷாப்பீ சிங்கப்பூர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. - கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இணைய வணிக நிறுவனமான ஷாப்பீ சிங்கப்பூர், தனது முன்னாள் மூத்த ஊழியர் ஒருவர் தனது போட்டி நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தில் சேர்வதைத் தடுக்கும் முயற்சியில் தோல்வி கண்டது.

தனது முன்னாள் மூத்த நிர்வாகியான திரு லிம் டெக் யோங், ‘பைட் டான்ஸ்’ நிறுவனத்தில் பணியில் சேரக்கூடாது, தன் வாடிக்கையாளர்களையும் ஊழியர்களையும் அவர் அணுகக்கூடாது என வலியுறுத்தி, நீதிமன்றத்தில் ஷாப்பீ வழக்கு தொடுத்தது.

திரு லிம், பைட் டான்சில் பணியில் சேர இடைக்காலத் தடை விதிக்கும்படியும் அது நீதிமன்றத்திடம் கோரியது.

ஷாப்பீ சிங்கப்பூர் நிறுவனத்தின் கோரிக்கையை நீதிபதி குவெக் மீன் லக் நிராகரித்தார்.

போட்டித்தன்மை சாராத கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதாக திரு லிம் மீது சுமத்திய குற்றச்சாட்டை ஷாப்பீ சிங்கப்பூர் நிரூபிக்கத் தவறிவிட்டது என நீதிபதி குவெக் புதன்கிழமை (ஜனவரி 31) வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்