ஃபிலிப் சான் ஹாங்காங் சிங்கப்பூர் வர்த்தக சங்கத்திலிருந்து விலகினார்

1 mins read
759bb5c7-a84d-49fb-92c8-ec5caa20d79e
சிங்கப்பூர் தொழிலதிபர் ஃபிலிப் சான் மான் பிங். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபரான ஃபிலிப் சான் மான் பிங், ஹாங்காங் சிங்கப்பூர் வர்த்தகச் சங்கத்தின் நிர்வாக குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

சிங்கப்பூரின் புதிய வெளிநாட்டினர் தலையீட்டு சட்டப்படி அவரை முக்கியமான அரசியல் சார்புடைய நபராக சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவிக்க உள்ளதாக அவருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், 59 வயதான அவர் தொண்டு நிறுவனம் ஒன்றில் தான் வகித்த பதவியிலிருந்தும் விலகியதாகத் தெரிவிக்கப்பட்டது.

திரு ஃபிலிப் சான்னின் பதவி விலகல் கடிதத்தை ஹாங்காங் சிங்கப்பூர் வர்த்தகச் சங்கத்தின் இயக்குநர் சபை தலைவர் திரு டென்னிஸ் சியூ ஏற்கொண்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அச்சங்கம் திங்கட்கிழமை தெரிவித்தது.

“திரு சானின் விலைமதிப்பற்ற பங்களிப்புகள், அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்திற்காக நாங்கள் அவருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என அச்சங்கம் மேலும் கூறியது.

குறிப்புச் சொற்கள்