தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லஞ்சம் வாங்கியதாக தேசிய நூலக வாரிய உதவி இயக்குநர் மீது குற்றச்சாட்டு

1 mins read
a5eae8f5-f64c-497e-a059-a8df722b34c8
ஏட்ரியன் சான் சியூ லெங் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

லஞ்சம் வாங்கியதாக தேசிய நூலக வாரியத்தின் உதவி இயக்குநரான 48 வயது ஏட்ரியன் சான் சியூ லெங் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது.

2018ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இரு வெவ்வேறு நிறுவனங்களின் இயக்குநர்களிடமிருந்து அவர் மொத்தம் $140,000 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. புரோட்காஸ்ட் இஞ்சினியரிங் சர்வீசஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநரான 49 வயது ஃபிரான்சிஸ் லிம் பூன் ஹோரிடமிருந்து சான் $90,000 லஞ்சம் வாங்கியதாக நம்பப்படுகிறது.

பேன் பிரிபில்ட் நிறுவனத்தின் அப்போதைய இயக்குநரான 49 வயது புவான் காய் சியோங்கிடமிருந்து சான் $50,000 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி 7ஆம் தேதியன்று சான் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

சான் தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்