தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சரிபார்க்கப்படாத செயலிகளை ஆண்ட்ராய்டு பயனீட்டாளர்கள் பதிவிறக்கம் செய்யமுடியாது

1 mins read
8b302a65-583c-4f18-86b0-518405c22f59
மோசடி, நச்சுநிரல் போன்றவற்றை தடுக்கும் விதமாக சோதனை முயற்சியாக கூகல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூரில் உள்ள ஆண்ட்ராய்டு பயனீட்டாளர்கள் இனி சரிபார்க்கப்படாத செயலிகளை பதிவிறக்கம் செய்யமுடியாது.

மோசடி, நச்சுநிரல் போன்றவற்றைத் தடுக்கும் விதமாக சோதனை முயற்சியாக கூகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த புது முயற்சி மூலம் சந்தேகத்திற்குரிய செயலிகள் கைப்பேசியில் உள்ள தரவுகளை நோட்டமிடுவது, குறுஞ்செய்திகளைப் படிப்பது போன்ற நடவடிக்கைகளைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

அடுத்த சில வாரங்களில் இந்த நடவடிக்கை நடப்புக்கு வரும். இந்தச் சோதனையை செய்யும் முதல் நாடாக சிங்கப்பூர் விளங்குகிறது.

இந்த திட்டத்தை சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து செய்வதாக கூகல் புதன்கிழமை அன்று தகவல் வெளியிட்டது.

ஆண்ட்ராய்டு மென்பொருள் மூலம் இயங்கும் சாதனங்களில் கட்டங்கட்டமாக இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்று கூகள் தெரிவித்தது.

சரிபார்க்கப்படாத செயலிகளை பதிவிறக்க முடியாமல் போகும்போது பயனீட்டாளர்களுக்கு அதுகுறித்து விளக்கம் தரப்படும் என்று கூகல் குறிப்பிட்டது.

நிதி தொடர்பான மோசடிகள் அதிகரித்துள்ள நிலையில் சிங்கப்பூரில் ஆண்ட்ராய்டு கைப்பேசிகளைப் பயன்படுத்துபவர்களுக்கு கூகளின் பாதுகாப்பு முறை பேருதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் மட்டும் 1,400க்கும் அதிகமானவர்கள் மோசடியில் சிக்கினர். அதன்மூலம் சுமார் 20.6 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
நிதி மோசடிமோசடி