பெரும்பாலான பிரிவுகளில் சிஓஇ கட்டணம் குறைந்தது

பெரும்பாலான பிரிவுகளில் சிஓஇ கட்டணம் குறைந்தது

1 mins read
18eef100-922a-4bd1-8fac-338ebbd3112f
பெரிய வகை, சிறிய வகை கார்களுக்கான கட்டணம் குறைந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பெரும்பாலான பிரிவுகளில் வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணம் குறைந்துள்ளது.

சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

அதற்கான கட்டணம் 5.9 விழுக்காடு அதிகரித்து $72,001ஆகப் பதிவானது.

பெரிய வகை கார்களுக்கான கட்டணம் ஆக அதிகமான சரிவைப் பதிவு செய்தது.

அப்பிரிவின் கட்டணம் 8.6 விழுக்காடு குறைந்து $102,338ஆகப் பதிவானது.

சிறிய வகை கார்களுக்கான கட்டணம் 3.2 விழுக்காடு குறைந்து $79,000ஆகப் பதிவானது.

பொதுப் பிரிவுக்கான கட்டணம் 8.2 விழுக்காடு சரிந்தது.

அப்பிரிவின் கட்டணம் $109,004லிருந்து $100,101ஆகக் குறைந்தது.

தொடர்புடைய செய்திகள்

மோட்டார் சைக்கிளைத் தவிர்த்து மற்ற எல்லா வகை வாகனங்களுக்கும் இப்பிரிவைப் பயன்படுத்தலாம்.

ஆனால் இப்பிரிவு பெரும்பாலும் பெரிய வகை கார்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணம் 0.2 விழுக்காடு குறைந்து $9,290ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்