தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு கூட்டப்படவில்லை: சான் சுன் சிங்

1 mins read
957ed869-c4d5-43ec-8e4e-fb592913ae1b
தொகுதி எல்லைகளை ஆய்வு செய்யும் குழு இன்னமும் கூட்டப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுத் தேர்தலுக்கு முன்பு தொகுதி எல்லைகளை மறு ஆய்வு செய்யும் தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழு கூட்டப்படவில்லை என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிப்ரவரி 6ஆம் தேதி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் (இபிஆர்சி) அறிக்கையை வெளியிடுவது முதல் தேர்தல் நேரம் வரை வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் தயார் செய்துகொள்ள போதுமான அவகாசம் இருக்கும்” என்று திரு சான் கூறியுள்ளார்.

பாட்டாளிக் கட்சியின் அல்ஜுனிட் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஜெரால்ட் கியாம், குழு கூட்டப்படுவது குறித்து கேள்வி ஒன்று கேட்டார்.

இதற்கு, பிரதமர் லீ சியன் லூங் சார்பில் அமைச்சர் சான் பதிலளித்தார்.

2020 ஜூலை பொதுத் தேர்தலுக்கு முன்பு 2019 ஆகஸ்ட் மாதத்தில் இபிஆர்சி குழு கடைசியாகக் கூட்டப்பட்டது.

அந்த குழு, இடம் மாறிய மக்கள் தொகை, புதிய குடியிருப்பு மேம்பாடுகள் போன்றவற்றை கருத்தில்கொண்டு எல்லையை நிர்ணயிக்கிறது.

குறிப்புச் சொற்கள்