தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லஞ்சம் வாங்கியதாக முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது குற்றச்சாட்டு

1 mins read
ee071a77-690b-41fb-a831-365061f7cbfc
ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் தொடர்பாக ஒரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கும் கொலின் சியூ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்பு குழுமத்தின் அப்போதைய இயக்குநரிடமிருந்து $668,000 லஞ்சம் வாங்கியதாக ஏஓஎன் ரிஸ்க் சொலுஷன்ஸ் சிங்கப்பூர் எனும் காப்புறுதி நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மீது பிப்ரவரி 8ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.

56 வயது கொலின் சியூ மீது ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் தொடர்பாக ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

லஞ்சப் பணத்தில் சிலவற்றைப் பயன்படுத்தி பிடோக் டெரசில் தரை வீடு ஒன்றை சியூ வாங்கியதாகக் கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டுக்கும் 2018ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஃபுல்லர்ட்டன் சுகாதாரப் பராமரிப்புக் குழுமத்தின் அப்போதைய இயக்குநரான 50 வயது டேனியல் சான் பாய் ஷெங்கிடமிருந்து சியூ $348,000 லஞ்சம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டில் ஏஐஏ ஹாங்காங்கின் கார்ப்பரேட் சொலுஷன்ஸ் பிரிவின் இயக்குநராக சியூ பதவி வகித்தபோது சானிடமிருந்து மேலும் $320,000 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் நான்கு பேர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த வழக்கு மார்ச் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்