இணைய வணிகம் தொடர்பான புகார்கள் 47% அதிகரிப்பு: பயனீட்டாளர் சங்கம்

இணையத்தில் வாங்குவது தொடர்பாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் (கேஸ்) பெற்ற புகார்கள் 2023ஆம் ஆண்டில் 47 விழுக்காடு உயர்ந்தன. புகார்களில் ஐந்தில் ஒரு பங்கு, விமான நிறுவனங்கள், சுற்றுலா, ஹோட்டல் தொழில்கள் தொடர்பானவை.

சங்கம், பிப்ரவரி 8ஆம் தேதி வெளியிட்ட வருடாந்திர புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2022 முதல் வீட்டுப் புதுப்பிப்பு குத்தகையாளர்கள், அழகு சேவைகள் போன்ற பல்வேறு வணிகம் சார்ந்த புகார்களில் பொதுவான சரிவு இருந்தபோதிலும், மோட்டார் கார் தொழில்துறை ஆக அதிகமாக 1,306 புகார்களைப் பெற்றது.

ஒட்டுமொத்தத்தில் புகார்களின் மொத்த எண்ணிக்கை 15,144லிருந்து 13,991 ஆக 24 விழுக்காடு சரிந்தது.

இணைய வணிகங்கள், இணைய சந்தைகளுக்கு எதிராக 2023ல் பயனீட்டாளர்களிடமிருந்து 3,711 புகார்களைப் பெற்றதாக சங்கம் கூறியது. இது 2022ல் 2,530 ஆக இருந்தது.

இந்த புகார்களில், கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு ஒப்புக்கொள்ளப்பட்ட விநியோக காலத்திற்குள் தங்கள் பொருள்களை பெறாதது தொடர்பானவை. 17 விழுக்காடு, விற்பனையாளர் கொடுத்த காலக்கெடுவிற்குள் பயனீட்டாளர்கள் செலுத்திய தொகையைத் திரும்பப் பெறாதது தொடர்பானவை.

இணைய வணிகங்களுக்கு எதிரான புகார்களின் அதிக எண்ணிக்கை கவலைக்குரியது என்ற சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் திரு மெல்வின் யோங் குறிப்பிட்டார்.

“அதனால்தான் நியாயமான வணிகம், பயனீட்டாளர்களுக்கு உகந்த கொள்கைகள் ஆகியவற்றில் கடப்பாடு கொண்டுள்ள நம்பகமான இணைய வணிகங்களை அடையாளம் காண பயனீட்டாளர்களுக்கு உதவுவதற்காக ‘கேஸ்டிரஸ்ட்’ அங்கீகாரத் திட்டத்தை சங்கம் கடந்த ஆண்டு தொடங்கியது,” என்ற திரு யோங், 11 இணைய வணிகங்கள் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகச் சொன்னார்.

2023ல் பெறப்பட்ட இணைய வணிகம் தொடர்பான புகார்களில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒன்று விமான சேவை, சுற்றுலா, ஹோட்டல் தொழில்கள் தொடர்பானவை என்று சங்கம் கூறியது.

மோட்டார் வாகன தொழில் சம்பந்தப்பட்ட புகார்கள் 1,213லிருந்து 1,306 ஆக எட்டு விழுக்காடு உயர்ந்துள்ளன.

வாடகை அல்லது பகிரப்பட்ட கார்கள் குறித்த புகார்கள், குறிப்பாக ஏற்கெனவே உள்ள குறைபாடுகள் அல்லது சேதங்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்துள்ளன.

அது தொடர்பான 1,306 புகார்களில், 60 விழுக்காடு பயன்படுத்தப்பட்ட கார்கள் தொடர்பானவை. 33 விழுக்காடு வாடகை அல்லது பகிரப்பட்ட கார்கள் தொடர்பானவை.

2023ல் பயனீட்டாளர்கள் முன்பணம் செலுத்தியதில் கிட்டத்தட்ட $476,000 இழந்தனர். முக்கியமாக திடீர் வணிக மூடல்கள் காரணமாக. ஆக அதிகமாக அழகுப் பராமரிப்பு துறையில் $116,000 இழந்தனர். அடுத்த நிலையில், உடற்பயிற்சிக் கூடம், உடற்பயிற்சி மன்றத் துறையில் $110,000 இழந்தனர்.

புகார்கள் தொடர்பாக சங்கம் மேற்கொண்ட சமசரப் பேச்சு வார்த்தைகளால், வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட $2.5 மில்லியன் பணத்தை மீட்டெடுக்க முடிந்தது. 2022ல் மீட்கப்பட்ட $2.1 மில்லியனைவிட இது அதிகம். .

2023ல் பயனீட்டாளர் புகார்கள் ஒட்டுமொத்தமாக குறைந்தாலும் எண்ணிக்கையைக் குறைக்க மேலும் பலவற்றைச் செய்யலாம் என்று திரு யோங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!