தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடக்க பள்ளி மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் 2024

2 mins read
4ceed5f1-9777-4049-ac90-ef7a8fa3da2b
படம்: - தமிழ் முரசு

தெலுக் பிளாங்கா சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ் மொழித்திறன் தொடக்கச் சுற்றுப் போட்டிகள் தெலுக் பிளாங்கா சமூக மன்ற பலநோக்கு மண்டபங்களில் பின்வரும் நாள்களில் பிற்பகல் 1.30 மணி முதல் நடைபெறவுள்ளன.

அனைத்துப் போட்டியாளர்களும் பிற்பகல் 1.00 மணி முதல் தெலுக் பிளாங்கா சமூக மன்ற பலநோக்கு மண்டபத்தில் பதிவு செய்ய வேண்டும்.

ஞாயிறு 18/02/2024, 6ம் வகுப்பு பேச்சுப் போட்டியின் முதல் சுற்றும்; 4ம் வகுப்பு கட்டுரைப் போட்டியின் இறுதிச் சுற்றும் நடைபெறும்.

சனிக்கிழமை 24/02/2024, 5ம் வகுப்பு பேச்சுப் போட்டியின் முதல் சுற்று இடம்பெறும். ஞாயிறு 03/03/2024, 3ம் வகுப்பு கதை கூறும் போட்டியின் முதல் சுற்று நடக்கும்.

ஞாயிறு 10/03/2024, 2ம் வகுப்பு வாசிப்புப் போட்டியின் இறுதிச் சுற்று நடைபெறும்.

இறுதிச் சுற்றுகளும் பரிசளிப்பு விழாவும் ஞாயிறு 07/04/2024 பிற்பகல் 1.00 மணி முதல் தெலுக் பிளாங்கா சமூக மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

மேற்கூறப்பட்டுள்ள போட்டிகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் சிங்கப்பூரின் அனைத்து தொடக்கப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளின் முதல்வர்கள் அல்லது தமிழ் ஆசிரியரால் நியமனம்  செய்யப்பட்ட மாணவ / மாணவியரின் பெயர்கள் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மின்னஞ்சல் அல்லது தொலைப்பிரதி மூலமாகவோ வியாழக்கிழமை 15/02/2024ம் தேதிக்குள் தெலுக் பிளாங்கா சமூக மன்றத்துக்கு அனுப்பி வைக்கவும்.

மேல் விவரங்களுக்கு: கி.  இராமமூர்த்தி (8118 4671), ச. விஜய் (9148 2343)

குறிப்புச் சொற்கள்