தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனப் புத்தாண்டுக்கு முதல் நாளன்று கைகலப்பு; மருத்துவமனையில் ஆடவர்

1 mins read
a55f12bf-5fa9-4919-91bb-4ee1136a29f5
பீப்பள்ஸ் பார்க் காம்பிளக்ஸ் கடைத்தொதியில் சண்டை மூண்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனப் புத்தாண்டுக்கு முதல் நாளன்று பீப்பள்ஸ் பார்க் காம்பிளக்ஸ் கடைத்தொகுதியில் சண்டை மூண்டது.

இந்தச் சம்பவம் பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி மாலை நிகழ்ந்தது.

கடைத்தொகுதியில் உள்ள உணவு நிலையத்தில் உணவருந்திக்கொண்டிருந்தோருடன் 29 வயது ஆடவர் கைகலப்பில் ஈடுபட்டார்.

இதில் அவரது மூக்கில் காயங்கள் ஏற்பட்டன.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அவருக்கு முதலுதவி அளித்ததாக அறியப்படுகிறது.

அந்த ஆடவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்