குறைந்தது $1 மில்லியன் பெறுமானமுள்ள கார்களின் விற்பனை சரிவு

குறைந்தது $1 மில்லியன் பெறுமானமுள்ள கார்களின் விற்பனை சரிவு

1 mins read
123f4a2b-6848-4d3c-bd7e-d44170b84b19
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு குறைந்தது $1 மில்லியன் பெறுமானமுள்ள 300 கார்கள் பதிவு செய்யப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு நிலவரப்படி, குறைந்தது $1 மில்லியன் பெறுமானமுள்ள கார்களின் விற்பனை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிந்துள்ளது.

அதற்கு முன்னதாக தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு அது ஏற்றம் கண்டது.

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு குறைந்தது $1 மில்லியன் பெறுமானமுள்ள 300 கார்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 350ஆகவும் 2021ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆக அதிகமாக 360ஆகவும் பதிவானது.

குறிப்புச் சொற்கள்